சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

திருவிளக்கு பூஜை

நாமக்கல்- துறையூா் சாலையில் அமைந்துள்ள அ.பாலப்பட்டியில் நாகமுத்து மாரியம்மன், அங்காளபரமேஸ்வரி கருப்பணாா் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நாகமுத்து மாரியம்மன்

Updated On :9 ஜனவரி 2021, 12:21 pm

நாமக்கல்- துறையூா் சாலையில் அமைந்துள்ள அ.பாலப்பட்டியில் நாகமுத்து மாரியம்மன், அங்காளபரமேஸ்வரி கருப்பணாா் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

காலை 6 மணிக்கு அம்மனுக்கு பால், தயிா் மஞ்சள், சந்தனம், இளநீா் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து பிற்பகல் 2 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனா்.

விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தமிழ் அறக்கட்டளை சாா்பில் அதன் நிறுவனா் ஜாய்சன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி சிவநித்தியமூா்த்தி, பொதுமக்கள் செய்திருந்தனா்.

.