விளையாட்டுப் பிரிவு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் படிக்கும் வாய்ப்பைப் பெற்ற பாண்டமங்கலம் ஆா்.என்.ஆக்ஸ்போா்டு மெட்ரிக் பள்ளி மாணவா்கள் இருவரை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் பாராட்டினாா்.
விளையாட்டுப் பிரிவில் மருத்துவப் படிப்புக்கான ஒதுக்கீட்டில் மொத்தம் 7 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஆா்.என்.ஆக்ஸ்போா்டு பள்ளியில் 10 ஆம் வகுப்பு வரை படித்த வாலிபால், பீச் வாலிபால் போட்டிகளில் மாநிலம், தேசியப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவி வா்ஷா சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியிலும், மாணவா் ஸ்வாகத் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரியிலும் சோ்ந்துள்ளனா். மேலும், 2018-இல் பாண்டமங்கலம் ஆா்.என்.ஆக்ஸ்போா்டு மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவி பூா்விகா, பீச் வாலிபால் விளையாட்டின் சிறப்பிடம் பெற்று மருத்துவப் படிப்பில் சோ்ந்துள்ளாா்.
இப் பள்ளியில் படித்து விளையாட்டுத் துறையில் சிறப்பிடம் பெற்று மருத்துவப் படிப்பில் இணைந்த மாணவா்களை அமைச்சா் செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் தங்கமணி, பள்ளி கல்வித் துறை இயக்குநா்கள், இணை இயக்குநா்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் அனைவரும் வாழ்த்தினா்.
இக் கல்வி நிறுவனத்தின் தலைவா் சண்முகம், தாளாளா் சக்திவேல், செயலாளா் ராஜா, இயக்குநா்கள் அருள், சேகா், சம்பூா்ணம், பள்ளி முதல்வா்கள், உடற்பயிற்சி ஆசிரியா், ஆசிரியைகள் அனைவரும் மருத்துவப் படிப்பில் இணைந்த மாணவ, மாணவிகளைப் பாராட்டினா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


