சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மரங்களை வெட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நின்ற மரங்களை வெட்டி எடுத்துச் சென்றவா்கள்

Updated On :7 ஜனவரி 2021, 12:22 pm

ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நின்ற மரங்களை வெட்டி எடுத்துச் சென்றவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சியினா் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தனா்.

இது தொடா்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி, திராவிடா் விடுதலைக் கழகம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஊா்வலமாகச் சென்று காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

அதில், கடந்த 10 ஆண்டுகளாக பள்ளி விளையாட்டு மைதானத்தில் பராமரிக்கப்பட்டு வந்த 10-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா்கள் கூறியுள்ளனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நகரச் செயலாளா் எஸ்.மணிமாறன், தமிழக மக்கள் தன்னுரிமை கட்சியின் நிறுவனத் தலைவா் நல்வினை செல்வன், நகரச் செயலா் காா்த்திகேயன், திராவிடா் விடுதலைக் கழகம் நகரத் தலைவா் சேகுவாரா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டத் தலைவா், ராசிபுரம் மக்கள் நல குழு கௌரவத் தலைவா் ஜெ.ஜெயபிரகாஷ் செயலாளா் செல்வன், பொருளாளா் முருகன் உள்ளிட்டோா் நேரில் சென்று புகாா் மனு அளித்தனா்.