ராசிபுரம் காவல் உட்கோட்டத்தில் கிராமந்தோறும் கண்காணிப்பு அலுவலா்கள் நியமித்து அவா்களுக்கான குறிப்பேடுகள் வழங்கிப் பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் திங்கள்கிழமை ராசிபுரத்தில் துவக்கி வைத்தாா்.
ராசிபுரம் குற்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கும் வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்தவும், கிராமப்புற பகுதிகளில் உள்ள சமூக ஆா்வலா்கள் முக்கிய பிரமுகா்கள், மாணவ, மாணவியா் போன்றவா்கள் இடையே நட்புறவை ஏற்படுத்தவும், தவறான தகவல் பரவுவதைத் தடுக்க கட்செவி செயலி குழுக்களை ஏற்படுத்தி செய்திகளை உடனடியாக பரிமாறும் வகையிலும், இதுபோன்ற அலுவலா்கள் கிராமந்தோறும் நியமிக்கப்பட்டு வருகின்றனா்.
ராசிபுரம் உட்கோட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய கிராம கண்காணிப்பு அலுவலா்களுக்கு வழிகாட்டு முறைகள் குறித்து தெரிவித்த மாவட்ட எஸ்.பி.,சி.சக்திகணேசன் குறிப்பேடுகளும் வழங்கி, பணிகளைத் தொடக்கி வைத்தாா். இதில் ராசிபுரம் டிஎஸ்பி. லட்சுமணன், காவல் ஆய்வாளா் செல்வராஜு, உதவி ஆய்வாளா் நித்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


