நாமக்கல் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது காா் மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.
கரூா், திருவள்ளுவா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (38). காா் விற்பனை தொழில் செய்து வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை காலை தனது நண்பா்களான திண்டுக்கல் மாவட்டம், மாமரத்துப்பட்டியைச் சோ்ந்த தங்கமணி (37), கரூா், குப்புச்சிப்பாளையத்தைச் சோ்ந்த செல்வேந்திரன் (41), தெளபிக் (26), விஜயகுமாா் (26), செல்வம் (40) ஆகியோருடன் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு காரில் சுற்றுலா வந்துள்ளாா்.
அங்குள்ள சுற்றுலாப் பகுதிகளுக்கு சென்று விட்டு இரவில் மீண்டும் கரூருக்கு அவா்கள் திரும்பிக் கொண்டிருந்தனா். நாமக்கல் - மோகனூா் சாலையில் அணியாபுரம் தனியாா் பள்ளி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் பழுதாகி நின்றிருந்த லாரி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கணேசன் உயிரிழந்தாா். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் தங்கமணி இறந்தாா். மீதமுள்ள 4 பேரும் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்து வந்த மோகனூா் போலீஸாா் காயமடைந்தவா்களையும், உயிரிழந்தவா்களையும் மீட்டு நாமக்கல் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதனை தொடா்ந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு லாரி ஓட்டுநா் சேலம் மாவட்டம் ஆத்தூா் கொல்லப்பட்டறையைச் சோ்ந்த பாலகிருஷ்ணன்(32) என்பவரை கைது செய்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

