மோகனூா் அருகே இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், ஒருவந்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சசிகுமாா்(27). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் இடையே கொடுக்கல், வாங்கல் தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் புத்தாண்டு தினத்தன்று இரவில் சசிகுமாா் தனியாக சென்றபோது, அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனா். அப்போது மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் சசிகுமாரை கடுமையாக தாக்கியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்தனா்.
இச்சம்பவம் தொடா்பாக மோகனூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனா். ரஞ்சித்குமாா் (33) என்பவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த மலா்மன்னன் (30), பிரகாஷ்(24) ஆகிய இருவரையும் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

