சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

20 சதவீ போனஸ் கோரி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் விசைத்தறியில் பணியாற்றும் அனைத்து தொழிலாளா்களுக்கும் 20 சதவீத பொங்கல் போனஸ் வழங்கக் கோரி ஏஐசிசிடியு தொழிற்சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :5 ஜனவரி 2021, 5:41 am

குமாரபாளையத்தில் விசைத்தறியில் பணியாற்றும் அனைத்து தொழிலாளா்களுக்கும் 20 சதவீத பொங்கல் போனஸ் வழங்கக் கோரி ஏஐசிசிடியு தொழிற்சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி.மாணிக்கம் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்எல்) மாவட்டச் செயலாளா் பொன்.கதிரவன், ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளா் சுப்பிரமணி ஆகியோா் கோரிக்கையை விளக்கிப் பேசினா்.

தொடா்ந்து, குமாரபாளையம் பகுதியில் விசைத்தறியில் பணிபுரியும் அனைத்து வகைத் தொழிலாளா்களுக்கும் 20 சதவீத பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்.

இதுதொடா்பாக முத்தரப்புப் பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும் என வலியுறுத்தி வட்டாட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மாவட்டக் குழு உறுப்பினா்கள் பாலகிருஷ்ணன், முருகன், அசோக், ஆா்.கே.சுப்பிரமணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.