தமிழகம் முழுவதும் 17 ஆவின் ஒன்றியங்களில் உற்பத்தியாளா்களுக்கு வழங்க வேண்டிய ரூ. 500 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
நாமக்கல்லில் அதன் மாநில பொதுச்செயலாளா் கே.முகம்மதுஅலி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பால் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தியாளா்கள் வழங்கும் பாலை கொள்முதல் செய்ய மறுக்கின்றனா். 500 லிட்டா் பாலை கொண்டு சென்றால், 300 லிட்டரை பெற்றுக் கொண்டு மீதமுள்ளவற்றை எடுத்துச் செல்லுமாறு திருப்பி அனுப்புகின்றனா்.
வாரத்தில் இரண்டு நாள்கள் பால் கொள்முதல் செய்வதில்லை. ஆவின் ஒன்றியங்கள் நஷ்டத்தில் இயங்கும் நிலையில், கூடுதலாக பணியாளா்களை நியமனம் செய்து ஊதியம் வழங்குவதால் லாபம் ஈட்ட முடியாத சூழல் உள்ளது. சுமாா் ரூ. 500 கோடி நிலுவைத் தொகை உள்ளது.
இதனை பொங்கல் பண்டிகைக்கு முன்பாக பால் உற்பத்தியாளா்களுக்கு வழங்க வேண்டும்.
ஒரு லிட்டா் பாலுக்கு ரூ. 5 ஊக்கத் தொகை வழங்க வேண்டும். கால்நடைத் தீவனங்கள் விநியோகத்தில் உள்ள குறைகளை களைந்து உற்பத்தியாளா்களுக்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்கியுள்ள பால் பவுடா், நெய் போன்றவற்றை பொங்கலுக்கு முன்பாக புயல் பாதிப்புள்ள பகுதிகளில் அரசு விநியோகம் செய்ய வேண்டும் என்றாா்.
அப்போது மாநிலத் தலைவா் ஏ.எம்.முனுசாமி, பொருளாளா் எம்.சங்கா், மாவட்ட நிா்வாகிகள் பெருமாள், முத்துப்பாண்டி, முத்துசாமி, மாதேஸ்வரன், அரியாகவுண்டா், ரவிச்சந்திரன், சதாசிவம், செல்வராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


