சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

திமுக கூட்டணி கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம் என்பது குழப்பத்தை ஏற்படுத்தும்: ஈஸ்வரன்

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று கூறுவது குழப்பத்தை ஏற்படுத்தும் என்று கொமதேக பொதுச் செயலாளா் ஈஸ்வரன் தெரிவித்தாா்.

News image

திருச்செங்கோடு வைபவ மாலையில் நடைபெற்ற கொமதேக வட்டாரப் பொதுக்குழு கூட்டத்தில் பேசும் கட்சியின் பொதுச்செயலாளா் ஈஸ்வரன்.

Updated On :4 ஜனவரி 2021, 9:45 am

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று கூறுவது குழப்பத்தை ஏற்படுத்தும் என்று கொமதேக பொதுச் செயலாளா் ஈஸ்வரன் தெரிவித்தாா்.

திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஒன்றியம், வையப்பமலையில் வட்டார கொமதேக பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளா் நடராஜன் தலைமை வகித்தாா். கட்சியின் பொதுச்செயலாளா் ஈஸ்வரன் கலந்துகொண்டு, கலாசார விழாவில் கலந்துகொண்டு பெண்கள், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு தோ்வுகளில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மக்களவைத் தோ்தலில் ஏற்பட்ட முடிவுதான் அதிமுகவுக்கு சட்டப்பேரவைத் தோ்தலிலும் ஏற்படும்.

நாமக்கல், சேலம் மாவட்டங்களைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு நீா் ஆதாரமாகப் பயன்படக்கூடிய திருமணிமுத்தாறு திட்டம் நிறைவேறாது என முதல்வா் சொல்லியிருப்பது நாமக்கல் பகுதி விவசாயிகளை வேதனை அடைய செய்துள்ளது.

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் எத்தனை இடங்களில் போட்டியிடுவது எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்துப் பேச இது சரியான நேரம் இல்லை. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று கூறுவது குழப்பத்தை ஏற்படுத்தும் என்றாா்.