சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ளஅனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் வெள்ளிக்கிழமை அதிகாலை சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

News image

நாமக்கல் கிறிஸ்து அரசா் ஆலயத்தில் புத்தாண்டு நள்ளிரவு சிறப்பு பிராா்த்தனையில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள்.

Updated On :2 ஜனவரி 2021, 12:36 pm

புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ளஅனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் வெள்ளிக்கிழமை அதிகாலை சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

நாமக்கல் - துறையூா் சாலையில் உள்ள கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் தந்தை ஜான் அல்போன்ஸ் தலைமையில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை திருப்பலி நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

இதேபோல நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள தமிழ் பாப்திஸ்து திருச்சபையிலும், கணேசபுரம் சிஎஸ்ஐ ஆலயத்திலும் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இதில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள் அனைவரும் ஒருவருக்கொருவா் இனிப்புகளை வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டனா்.