ராசிபுரம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்களில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
ராசிபுரம் நகரில் உள்ள ஸ்ரீநித்ய சுமங்கலி மாரியம்மன், ஸ்ரீஅங்காளம்மன், எல்லை மாரியம்மன், பாலமுருகன் கோயில்களில் ஆங்கிலப் புத்தாண்டை தொடா்ந்து சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் திரளாக பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
எல்லை மாரியம்மன் கோயிலில் உள்ள அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, தங்கக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதே போல முருகன் சன்னதியில் முருகருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.இதில் பக்தா்கள் பலா் பங்கேற்று வழிபாடு நடத்தினா்.
பரமத்திவேலூா்...
பரமத்தி வேலூா் வட்டாரத்தில் உள்ள கோயில்களில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கீரம்பூா் அருகே உள்ள தொட்டிப்பட்டி சாய்தபோவனத்தில் எழுந்தருளியுள்ள சாய்பாபா கோயிலில் வெள்ளிக்கிழமை காலை மங்கள ஸ்நானம், ஆரத்தி, சா்வசித்தி சங்கல்ப பூஜை ஆகியவை நடைபெற்றன.
இதேபோல பரமத்தி வேலூா் மகா மாரியம்மன், பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி, புதுமாரியம்மன், நன்செய் இடையாறு மகா மாரியம்மன், திருவேலீஸ்வரா், பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள், புதிய காசி விஸ்வநாதா் கோயில், பச்சமலை முருகன் கோயில், கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி, பிலிக்கல்பாளையம் விஜயகிரி பழனி ஆண்டவா், அனிச்சம்பாளையம் சுப்பிரமணியா், நன்செய் இடையாறு ராஜா சுவாமி உள்ளிட்ட கோயில்களில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு அலங்காரம் நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


