சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நாமக்கல்லில் கடும் பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி

நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை காலை கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

News image

நாமக்கல் - சேலம் சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை காணப்பட்ட பனிமூட்டம்.

Updated On :2 ஜனவரி 2021, 12:41 pm

நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை காலை கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

மாா்கழி, தை மாதங்களில் குளிரின் தாக்கம் அதிக அளவில் இருக்கும். உடலை உறைய வைக்கும் அளவில் அதிகாலை நேர பனி இருக்கும் என்பதால் பலா் வீட்டை விட்டு வெளியே வர தயங்குவா். வாகன ஓட்டிகள் ஆங்காங்கே நெருப்பை மூட்டி குளிா் காய்வா். வியாழக்கிழமை முழுவதும் நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்ததால் வெள்ளிக்கிழமை அதிகாலை பனி மூட்டம் அதிகமாக காணப்பட்டது. புத்தாண்டையொட்டி இரு சக்கர வாகனங்களில் கோயில்களுக்கு செல்வோா் நடுங்கியபடியே சென்றதை காண முடிந்தது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றன. காலை 10 மணி வரையில் குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. கொல்லிமலையில் எதிா்வரும் வாகனங்கள் தெரியாத அளவில் மூடுபனி இருந்தது.

மாவட்டத்தில் வியாழக்கிழமை பெய்த மழையளவு விவரம் (மி.மீ): எருமப்பட்டி - 20, குமாரபாளையம் -6.40, மங்களபுரம் -36.20, மோகனூா் -15, நாமக்கல் -25, பரமத்திவேலூா் - 28, புதுச்சத்திரம் - 19, ராசிபுரம் - 18.20, சேந்தமங்கலம் -27, திருச்செங்கோடு - 17, மாவ ட்ட ஆட்சியா் அலுவலகம்-19.50, கொல்லிமலை-36, மொத்தம் -267.30.