ராசிபுரம் அருகேயுள்ள கீரனூர் வெற்றி விகாஸ் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்றனர்.
நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில், ராசிபுரம் வெற்றி விகாஸ் பள்ளி மாணவி எம்.வி.செüந்தர்யா 1200-க்கு 1185 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள்:
தமிழ் 198, ஆங்கிலம் 193, இயற்பியல் 197, வேதியியல் 200, கணினி அறிவியல் 200, கணிதம் 197 மதிப்பெண்கள்.
இவரை அடுத்து, பி.பத்மபிரியா 1182 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 2-ஆம் இடம் பெற்றார். இவர் பாட வாரியாக தமிழ் 198, ஆங்கிலம் 191, இயற்பியல் 194, வேதியியல் 199, உயிரியல் 200, கணிதம் 200.
மாணவர் இ.தனசேகர் 1180 மதிப்பெண்கள் பெற்று, 3-ஆம் இடம் பெற்றுள்ளார். பாட வாரியாக இவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ் 197, ஆங்கிலம், இயற்பியல் 197, வேதியியல் 200, உயிரியல் 200, கணிதம் 199.
இவை தவிர, பொது இயந்திரவியல் பாடப் பிரிவில் மாணவர் டி.கெüரிசங்கர், ஏ.ஆனந்த் ஆகியோர் 200-க்கு 200 பெற்றுள்ளனர். இதில் மாணவர் டி.கௌரிசங்கர் 1200-க்கு 1168 மதிப்பெண்கள் பெற்று, பொது இயந்திரவியல் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார்.
சமஸ்கிருத பாடத்தில் டி.ஐஸ்வர்யா, எம்.ஜனனி, டி.கார்த்திகா, பி.தினேஷ்குமார், ஏ.அஜித்குமார் ஆகியோர் 200-க்கு 198, பிரஞ்சு பாடத்தில் பி.பத்மபிரியா, எம்.முகமது நிகால், ஏ.அட்ரின்சுதிர் 200-க்கு 198 பெற்று மாநில அளவில் முதலிடத்தையும், தமிழ் பாடத்தில் எம்.வி.செüந்தர்யா 198 மதிப்பெண்களும், ஹிந்தி பாடத்தில் ரெனிதாமணி 194 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளனர்.
மேலும், கணித பாடத்தில் 35 பேரும், உயிரியல் பிரிவில் 29 பேரும், வேதியியல் பிரிவில் 25 பேரும் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பள்ளி நிறுவனர் எஸ்.குணசேகரன், தலைவர் எஸ்.கணேசன், செயலாளர் பாலசுப்பிரமணியன், தாளாளர் ஜி.வெற்றிச் செல்வன் உள்ளிட்டோர் பாராட்டினர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

