பரமத்திவேலூர் வட்டம், பாண்டமங்கலம் விவேகானந்தா பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்றனர்.
இந்தப் பள்ளி மாணவி அலமேலு பிருந்தா 1200-க்கு 1180 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தை பெற்றுள்ளார். மாணவி அபிராமி 1200-க்கு 1178 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், மாணவி அர்ச்சனாதேவி 1200-க்கு 1172 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.
மாணவர் பாலாஜீ இயற்பியல் பாடத்தில் 198 மதிப்பெண்களும், வேதியலில் 200 மதிப்பெண்களும், கணிதத்தில் 200 மதிப்பெண்களும், கணினி அறிவியலில் 200 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். பள்ளி மாணவர்கள் பாட வாரியாக கணிதத்தில் 15 பேரும், வேதியியலில் 8, கணினி அறிவியலில் 10, உயிரியலில் 3, மின் இயந்திரங்களும், சாதனங்களும் (இ.எம்.ஏ) பாடத்தில் 3 மாணவர்களும் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 1150 மதிப்பெண்களுக்கு மேல் 35 பேரும், 1100-க்கு மேல் 66 பேரும், 1000-க்கு மேல் 376 பேரும் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை விவேகானந்தா கல்வி அறக்கட்டளைத் தலைவர் கே.நெடுஞ்செழியன், செயலாளர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பாராட்டினர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

