திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் கோயில் திருவிழா தொடங்க உள்ளதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை அம்மன் தேர் வீதி உலா வந்தது.
திருச்செங்கோடு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் தேர்த் திருவிழா வரும் 16-ஆம் தேதி திருமலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்கு முன்னதாக அம்மன் தேர் அமாவாசை இரவில் நான்கு ரத வீதிகள் வழியாக உலா வரும். இதை பிள்ளையார் தேர் எனவும் கூறுவர். மிகவும் சிறிய தேராக இருப்பதால் சிறுவர்கள் மட்டுமே இதை இழுத்து வருவார்கள். இரவில் வருவதால் இருட்டுத் தேர் என்றும் அழைக்கப்பட்டு பின்னர் காலப் போக்கில் மருவி திருட்டுத் தேர் என்று அழைக்கப்படுகிறது.
தேரில் அம்மன் எழுந்தருளியவுடன் சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு, தேர் இழுக்கப்பட்டது. முக்கிய வீதிகள் வழியாக தேர் வந்தபோது மக்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

