சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

டீசல் விலை உயர்வு லாரி உரிமையாளர் சம்மேளனம் கண்டனம்

மத்திய அரசு டீசல் விலையை உயர்த்தியிருப்பதற்கு தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கண்டனம்

Updated On :11 மே 2013, 5:49 pm

மத்திய அரசு டீசல் விலையை உயர்த்தியிருப்பதற்கு தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

 டீசல் விலையை லிட்டருக்கு ரூ.1.08 உயர்த்தி மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே, பெட்ரோல், டீசல் விலை நிர்ணய உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்துள்ள நிலையில், தொடர்ந்து மாதம் தோறும் டீசல் விலை 50 காசுகள் உயர்த்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, வெள்ளிக்கிழமை லிட்டருக்கு ரூ.1.08 உயர்த்தப்பட்டிருப்பதற்கு தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 இதுகுறித்து, அந்த சம்மேளனத்தின் தலைவர் கே.நல்லதம்பி செய்தியாளர்களிடம் கூறியது:

 கடுமையான மின்தடை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சரக்குகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், டயர் விலை, சுங்கக் கட்டண உயர்வு, தொடரும் டீசல் விலையேற்றம்  உள்ளிட்டவற்றால் லாரி போக்குவரத்துத் தொழில் நலிவடைந்து வருகிறது. இச்சூழ்நிலையில், டீசல் விலையை மேலும் உயர்த்துவது இந்தத் தொழிலை முழுமையாக முடங்கச் செய்யும்.

 சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைக்கட்ட நிலையில், கடந்த வாரம் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது. இந்த நிலையில், டீசல் விலையை மட்டும் மத்திய அரசு உயர்த்தியிருப்பது கண்டனத்துக்குறியது. லாரி போக்குவரத்துத் தொழிலின் நிலைமைகளை கருத்தில் கொண்டு, மத்திய அரசு உயர்த்தப்பட்ட டீசல் விலையை வாபஸ் பெற்றிட வேண்டும் என்றார்.