குத்தாலம்: திருவாவடுதுறை ஆதீனம் குருமுதல்வர் நமசிவாயமூர்த்திகள் மகரத்தலைநாள் குருபூஜை விழா ஐந்தாம் நாள் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைப்பெற்றது.
துவக்கத்தில் சொ.சிவக்குமார் ஓதுவா மூர்த்திகள் திருமுறை பாடினார். ஆதீன பொதுமேலாளர் திருமாறன் வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஆர்.லலிதா கலந்துக்கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
மயிலாடுதுறை பகுதி கோயில்கள் என்றாலே தமிழையும், சைவத்தையும் வளர்த்து வரும் இடங்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். அதிலும் தமிழ்கலாச்சாரத்தை போற்றி பாதுகாத்து வருகிறது. திருவாவடுதுறை ஆதீனம் தமிழ் தாத்தா என போற்றப்படும் உ.வே. சாமிநாதய்யர், மீனாட்சிசுந்தரம் பிள்ளை போன்ற பல தமிழறிஞர்களின் ஆராய்ச்சிக்காக பலவிதங்களில் துணை நின்று உதவியுள்ளது. இன்றும் பல வரலாற்று நூல்களை வெளியிட்டு வருகின்றது. தற்போது கொரானா மற்றும் மழையின் காரணமாக எளிமையாக நடந்தாலும் எவ்வித விடுதலுமின்றி சிறப்பாக நடைபெறுவது பாராட்டத்தக்கது. தமிழ் பண்பாட்டைக் காக்கும் இவ்வித விழாக்களை எதிர்காலத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்த முயற்சி செய்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இரவு பூஜை நிறைவில் கோவை கோ.ந.முத்துக்குமாரசாமிக்கு நற்றமிழ் நாவலர் எனும் விருதும், பொற்கிழி ரூ. 5 ஆயிரமும் ஆதீனம் 24வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் இதில் ஆதீனத்தின் கட்டளை தம்பிரான் சுவாமிகள் ஸ்ரீமத் அம்பலவாண தம்பிரான், ஸ்ரீமத் அருணாச்சல தம்பிரான், ஸ்ரீமத் திருச்சிற்றம்பல தம்பிரான், ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான், ,ஆதீன காசாளர் சுந்தரேசன், ஆதீன கண்காணிப்பாளர் சண்முகம், ஆதீன புலவர் சு.குஞ்சிதபாதம், குத்தாலம் வருவாய் ஆய்வாளர் பரமானந்தம், ஊராட்சி செயலர் வெங்கடகிருஷ்ணன், ஆதீன கல்வி நிலைய ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


