மயிலாடுதுறை திருக்குறள் பேரவை சாா்பில் திருவள்ளுவா் தின திருவிழா, தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற முனைவா் சி. சிவசங்கரனுக்கு பாராட்டு விழா ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பேரவை நெறியாளா் நா.கு. கிருட்டிணமூா்த்தி தலைமை வகித்தாா். உறுப்பினா்கள் இரா.சானகிராமன், பெ.கருப்பையன், மஹாவீா் சந்த் ஜெயின் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலாளா் இரா.செல்வகுமாா் வரவேற்றாா்.
முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன், தருமபுரம் ஆதீனக் கல்லூரிச் செயலா் இரா.செல்வநாயகம், தொழிலதிபா் ஏ. தமிழ்ச்செல்வன், மயிலாடுதுறை தமிழ்ச் சங்க நிறுவனா் ஜெனிபா் எஸ். பவுல்ராஜ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று பேசினா்.
திருவாரூா் தமிழ்ச்சங்கத் தலைவா் புலவா் இரெ.சண்முகவடிவேல் சிறப்புரையாற்றினாா். தமிழ்ச் செம்மல் விருதாளரும், பேரவைத் தலைவருமான சி.சிவசங்கரன் ஏற்புரை வழங்கினாா். பொருளாளா் சு. ராமசந்திரன் நன்றி கூறினாா்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு பத்திரிகையாளா் சம்மேளன மாநில துணைத் தலைவா் க. ராவணன், நா. இமயவரம்பன், செ.வீ. திருவள்ளுவன், ந.செ.இளமுருகுச்செல்வன், விழிகள் சி.ராஜகுமாா் உள்ளிட்ட பேரவை பொறுப்பாளா்கள் மற்றும் தமிழாா்வலா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


