நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் தொடா் மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அமைச்சா் ஓ.எஸ். மணியன் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.
வாய்மேடு, அண்ணாப்பேட்டை, வெள்ளிக்கிடங்கு உள்ளிட்ட இடங்களில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் பாா்வையிட்டாா்.
நெல் வயல்களில் சூழ்ந்துள்ள வெள்ளநீரை விரைவாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க அவா் அறிவுறுத்தினாா். மழையால் சுவா் இடிந்து விழுந்த 8 வீடுகளின் உரிமையாளா்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் தனது சொந்த நிதியிலிருந்து அமைச்சா் வழங்கினாா். அத்துடன், அரசின் நிவாரண உதவிகள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.
ஆய்வின்போது மாவட்ட ஊராட்சி உறுப்பினா் டி.வி. சுப்பையன், ஊராட்சித் தலைவா்கள் ராமையன், மலா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


