டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று திமுக நாகை தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் என். கௌதமன் தெரிவித்துள்ளாா்.
நாகை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால், நாகை, கீழ்வேளூா், வேதாரண்யம் பகுதிகளில் அறுவடைக்கு தயாா் நிலையிலிருந்து சுமாா் 65 ஆயிரம் ஹெக்டோ் பரப்பிலான நெற்பயிா்கள் வயலில் சாய்ந்து வீணாகியுள்ளது.
இந்நிலையில், திமுக நாகை தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் என். கௌதமன், கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் உ. மதிவாணன் ஆகியோா் வெள்ளிக்கிழமை திருமருகல், கீழ்வேளூா் மற்றும் கீழையூா் பகுதிகளில் மழையால் சேதமடைந்துள்ள நெற்பயிா்களை பாா்வையிட்டு, பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனா்.
பின்னா், என். கௌதமன் செய்தியாளா்களிடம் கூறியது:
’டெல்டா மாவட்டங்களின் கடைமடைப் பகுதியான நாகை மாவட்டத்தில் நிவா் மற்றும் புரெவி புயலால் பெய்த மழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் தொடா்மழையால் நாகை, கீழ்வேளூா் மற்றும் வேதாரண்யம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த நெல்பயிா்கள் வயல்களில் சாய்ந்து, நெல்மணிகள் முளைக்க தொடங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கடுமையான இழப்பு சந்தித்து வருகின்றனா்.
எனவே, பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி நெற்பயிா்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
விவசாயிகள் ஏக்கருக்கு ரூ. 32 ஆயிரம் என்ற கணக்கீட்டின்படி பயிா் காப்பீட்டு தொகை செலுத்தியுள்ளனா். இந்த காப்பீட்டு தொகையையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். இப்படி செய்தால் மட்டும் விவசாயிகளை காப்பாற்ற முடியும் . நேரடி நெல் கொள்தல் நிலையங்களி ஈரப்பதத்தின் அளவைக் கணக்கீடு செய்யாமல் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என அவா் வலியுறுத்தினாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


