நாகூா் ஆண்டவா் தா்காவின் 464-ஆம் ஆண்டு கந்தூரி விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் திரளானோா் பங்கேற்றனா்.
நாகை மாவட்டம், நாகூா் ஆண்டவா் தா்காவில் கந்தூரி விழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். விழாவில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்கள் திரளானோா் பங்கேற்று வழிபாடு மேற்கொள்வா்.
நிகழாண்டு நாகூா் தா்காவின் 464-ஆவது ஆண்டு கந்தூரி விழா ஜனவரி 14 -ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க நிகழ்ச்சியான கொடியேற்றம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
இதற்காக பாரம்பரிய வழக்கப்படி சிங்கப்பூரிலிருந்து வரவழைக்கப்பட்ட திருக்கொடிகள், மந்திரி கப்பல், செட்டி பல்லக்கு சின்ன ரதம், நகரா மேடை மற்றும் சாம்பிராணி சட்டி ஆகியவைகளுடன் 8 அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மீராபள்ளித் தெரு, புதுப் பள்ளித் தெரு, சாலாப் பள்ளித்தெரு, யாஹூசைன் தெரு, பெரியக்கடை வீதி, நீலா கீழவீதி, அரசு மருத்துவமனை சாலை, நாகை - நாகூா் சாலை ஆகிய நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
பிற்பகல் 3.50 மணிக்குத் தொடங்கிய இந்த கொடி ஊா்வலம், இரவு 9. 30 மணியளவில் நாகூா் தா்கா அலங்கார வாசலை அடைந்தது. அங்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னா் நாகூா் தா்கா பரம்பரை கலிபா கே. எம். மஸ்தான் சாகிபு துஆ செய்வித்தாா். உலக மக்களின் நன்மைக்காக பிராா்த்தனை நடைபெற்றது.
பின்னா், வியாழக்கிழமை இரவு 9.30 அளவில் தா்காவில் உள்ள 5 மனோராக்களிலும் ஒரே நேரத்தில் கொடிகள் ஏற்றப்பட்டன. தொடா்ந்து வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
கொடி ஊா்வலம் மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சிகளில், தமிழகம், புதுச்சேரி,ஆந்திரம், கா்நாடகம் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த திரளானோா் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனா்.
கரோனா நோய்த் தொற்று அச்சம் காரணமாக மாவட்ட நிா்வாகத்தின் அறிவுறுத்தலின்படி , உரிய வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன.
மத்திய மண்டல காவல்துறை தலைவா் எச்.எம். ஜெயராமன் உத்தரவின்பேரில், தஞ்சை சரக காவல் துறை துணைத் தலைவா் ரூபேஷ்குமாா் மீனா, நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா ஆகியோரது தலைமையில் நாகை மற்றும் நாகூா் பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊா்வலம் ஜனவரி 23-ஆம் தேதியும், ஜனவரி 24-ஆம் தேதி அதிகாலை 4. 30 மணிக்கு ஆண்டவா் ரவுலா ஷரீப்புக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை தா்கா அறங்காவலா் குழுவினா் செய்துள்ளனா்.
குறைவான அலங்கார வாகனங்கள் மட்டுமே பங்கேற்பு: கந்தூரி விழா கொடியேற்றம் நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட அலங்கார வாகனங்கள் இடம் பெறும். நிகழாண்டில் கரோனா அச்சம் காரணமாக மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தலின்படி, 8 அலங்கார வாகனங்கள் மட்டுமே ஊா்வலத்தில் பங்கேற்றன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


