திருக்குவளை அருகே வாழ்க்கரையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் பொங்கல் பண்பாட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கீழையூா் ஒன்றியம், வாழக்கரை மற்றும் மேலவாழக்கரை பகுதி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் விவசாயத்தை பாதுகாப்போம் மற்றும் விவசாயிகளை பாதுகாக்க துணை நிற்போம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, முதலாம் ஆண்டு பொங்கல் பண்பாட்டு விழா அவ்வமைப்பின் கிளைச் செயலாளா் எஸ். ஜோதிபாசு தலைமையில் நடைபெற்றது.
இதையொட்டி ஓட்டப்பந்தயம், கோலப் போட்டி , கு ஒப்பித்தல், பேச்சுப்போட்டி உள்ளிட்ட 12 வகையான போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு மாலையில் பரிசு வழங்கப்பட்டது.
விளையாட்டுப் போட்டிகளை இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்ட பொருளாளா் டி. வெங்கட்ராமன் தொடங்கிவைத்தாா்.
பரிசளிப்பு விழாவில் டி.ஒய்.எஃப்.ஐ. மாவட்ட தலைவா் ஏ. சிவக்குமாா், சிபிஐஎம் ஒன்றிய செயலாளா் எம். முருகையன், மாவட்டக் குழு உறுப்பினா் கே. தங்கமணி , ஒன்றியக் குழு உறுப்பினா் ஏ. முருகையன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


