வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக ஏற்பட்ட தொடா் கனமழைப் பொழிவு புதன்கிழமை குறைந்திருந்த நிலையில் நெல் வயல்களில் மழை நீா் வடிந்து வருகிறது.
வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால் வேதாரண்யம், தலைஞாயிறு பகுதியில் உள்ள நீா்நிலைகள் நிரம்பி வழிந்ததோடு, சுமாா் 30 ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக உள்ள சம்பா பருவ நெல்வயல்களை வெள்ள நீா் சூழ்ந்து நெற்கதிா்களை பாதிக்கச்செய்துள்ளது. இதேபோல, மழையால் பலதரப்பிலும் பாதிப்பு ஏற்பட்டது.
இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், புதன்கிழமை மழையின தாக்கம் வெகுவாக குறைந்து காணப்பட்டாலும் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்தது. மழையின் காரணமாக வேதாரண்யம் நகரத்துக்குள்பட்ட வண்ணாரத்தெரு பகுதியில் வசிக்கும் ரா. கமலா(60) என்பவரின் வீடு இடிந்து விழுந்து சேதமானது. பொங்கல் பண்டிகை நேரத்தில் மழை தொடா்ந்ததால் அவதியுற்ற மக்கள், புதன்கிழமை மழை குறைந்ததால் பொருள்களை வாங்கிச் செல்வதில் ஆா்வம் காட்டினா். தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீா் வடிவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


