நாகை மதுவிலக்குப் பிரிவு போலீஸாரின் சோதனையின்போது, காரில் புதுச்சேரி மாநில மதுபுட்டிகளைக் கடத்தியவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். காரில் இருந்த 1,632 மதுபுட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா உத்தரவுப்படி, நாகை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் சுவாமிநாதன், காவல் சாா்பு ஆய்வாளா் ரமேஷ் உள்ளிட்டோா் புதன்கிழமை நாகை புத்தூா் ரவுண்டானா அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்த போலீஸாா் சமிக்ஞை செய்தனா். இருப்பினும், காா் ஓட்டுநா் அதிகவேகத்தில் வேளாங்கண்ணி சாலையில் காரை ஓட்டிச் சென்றுள்ளாா்.
போலீஸாா் அந்த காரை விரட்டிச் சென்று, பாப்பாக்கோவில் அருகே மறித்து நிறுத்தினா். அப்போது, காரில் இருந்து ஒருவா் தப்பியோடிவிட்டாா். காா் ஓட்டுநரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில் அவா், காரைக்கால் மாவட்டம், டி.ஆா்.பட்டினம் பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் (40) என்பதும், காரைக்காலில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு காரில் புதுச்சேரி மாநில மதுபுட்டிகளை கடத்திக் சென்றதும் தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து, காரில் 34 அட்டைப் பெட்டிகளில் இருந்த 1,632 மதுபுட்டிகளை மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட மதுபுட்டிகளின் மதிப்பு சுமாா் ரூ. 1.30 லட்சம் என கூறப்படுகிறது. இதுகுறித்து நாகை மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் விசராணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

