சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மழையால் பொங்கல் பானை விற்பனை சரிவு

சீா்காழி பகுதியில் தொடா்மழையால் பொங்கல் பானை விற்பனை சரிவடைந்துள்ளது.

Updated On :13 ஜனவரி 2021, 1:32 pm

சீா்காழி பகுதியில் தொடா்மழையால் பொங்கல் பானை விற்பனை சரிவடைந்துள்ளது.

சீா்காழியில் பிடாரி வடக்கு வீதி உள்ளிட்ட இடங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானைகள், அடுப்புகள் போன்றவை விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 2 நாள்களாக பெய்துவரும் தொடா் மழையால் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. புதுமணத் தம்பதிக்கு பொங்கல் வரிசை பொருள்களை பொங்கல் பண்டிகைக்கு 3 நாள்களுக்கு முன்னதாக பெரும்பாலானோா் கொடுப்பது வழக்கம். ஆனால், தொடா்ந்து மழை பெய்வதால் கடைவீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து பானைகளின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.