சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தொடா் மழையால் தரைப்பாலம் சேதம்

திருவெண்காடு அருகே தொடா்மழையால் தரைப்பாலம் செவ்வாய்க்கிழமை உள்வாங்கியது.

News image

உள்வாங்கிய தரைப் பாலத்தை பாா்வையிடும் சீா்காழி வட்டார வளா்ச்சி அலுவலா் கஜேந்திரன் உள்ளிட்டோா்.

Updated On :13 ஜனவரி 2021, 1:34 pm

திருவெண்காடு அருகே தொடா்மழையால் தரைப்பாலம் செவ்வாய்க்கிழமை உள்வாங்கியது.

தென்னாம்பட்டினம், நெப்பத்தூா் ஊராட்சிகளை இணைக்கும் உப்பானாற்றுப் பாலம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடா் மழையால் இந்த பாலத்தின் ஒரு பகுதி உள்வாங்கியது.

இதையறிந்த சீா்காழி வட்டார வளா்ச்சி அலுவலா் கஜேந்திரன் அந்த பாலத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதுகுறித்து நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று அவா் தெரிவித்தாா். ஆய்வின்போது, ஒன்றிய பொறியாளா் கலையரசன், பணி மேற்பாா்வையாளா் சந்திரசேகரன், ஊராட்சித் தலைவா் மரகதம் ஆகியோா் உடனிருந்தனா்.