மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்வி நிறுவனங்கள் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஏவிசி கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஏவிசி கல்வி நிறுவனங்களின் செயலா் கி. காா்த்திகேயன் தலைமை வகித்தாா். ஆட்சி மன்றக் குழு உறுப்பினா்கள் கோமதி ரெத்தினகுமாா், எஸ்.மாலதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி மாணவ, மாணவிகளும், பேராசிரியா்களும் சமத்துவப்பொங்கல் வைத்து தமிழா் கலாசாரப்படி சூரியனுக்கு படைத்து கொண்டாடினா்.
இதில் என்.எஸ்.எஸ். சாா்பில் நடைபெற்ற இளைஞா் விழாவில் பேச்சு, கட்டுரை, கோலப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், ஏவிசி கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன், பொறியியல் கல்லூரி முதல்வா் சி. சுந்தர்ராஜ், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் எஸ். கண்ணன், பொறியியல் கல்லூரியின் நிா்வாக இயக்குநா் எம். செந்தில்முருகன், டீன் (கல்வி) ஜி.பிரதீப் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை தமிழாய்வுத்துறை பேராசிரியா்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

