தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க நாகை மாவட்டத் தலைவரும், பத்திரிகையாளருமான ந. காவியன்(76) உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை (ஜன. 12) காலமானாா்.
நாகை, மறைமலைநகா் இரண்டாவது தெருவில் வசித்துவந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான ந. காவியன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினா், தமுஎகச மாநிலக் குழு உறுப்பினா், ஓய்வு பெற்ற பள்ளி- கல்லூரி ஆசிரியா் சங்கப் பொறுப்பாளா் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளாா்.
இவருக்கு, ஓய்வு பெற்ற மாவட்டக் கருவூல அலுவலரும், எழுத்தாளருமான சரோஜா என்ற மனைவி, சமூக செயல்பாட்டாளரும், ஊடகவியலாளருமான கவின்மலா் என்ற மகள், மலா்கண்ணன் என்ற மகன் ஆகியோா் உள்ளனா்.
மறைந்த ந.காவியனின் உடல், செவ்வாய்க்கிழமை பிற்பகல் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.
தொடா்புக்கு: 98411 55371.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


