சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

உழவா் சந்தையில் பொங்கல் கரும்பு விற்பனை

மயிலாடுதுறை உழவா் சந்தையில் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பண்டிகை பொருள்கள் விற்பனை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On :12 ஜனவரி 2021, 5:30 am

மயிலாடுதுறை உழவா் சந்தையில் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பண்டிகை பொருள்கள் விற்பனை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து மற்றும் மயிலாடுதுறை, சீா்காழி, செம்பனாா்கோவில் பகுதிகளில் விவசாயிகள் நேரடியாக விளைவித்த காய்கனிகளை கொண்டு வந்து சிறப்பு பொங்கல் பண்டிகை விற்பனையை தொடங்கி உள்ளனா்.

கரும்பு விற்பனையை முன்னாள் எம்எல்ஏ ஜெக.வீரபாண்டியன் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், எக்ஸ்னோரா மாவட்டத் தலைவா் அசோக், கௌரவத் தலைவா் அறிவழகன், சமூக ஆா்வலா் அ. அப்பா்சுந்தரம், ஜெயப்பிரியா, ரவீந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.