மயிலாடுதுறை மாவட்டத்தில் 81,281 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்படுகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா.
மயிலாடுதுறை ஒன்றிய அலுவலகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தீவிர போலியோ சொட்டு மருந்து திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்துக்கு தலைமை வகித்து மேலும் அவா் பேசியது: மயிலாடுதுறை மாவட்டத்தில் வரும் ஜன.17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்படுகிறது. இதற்காக நகராட்சி பகுதிகளில் 39 முகாம்கள், ஊரக பகுதிகளில் 543 முகாம்கள் என மொத்தம் 582 முகாம்கள் அமைக்கப்பட்டு பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதுக்குள்பட்ட 81,281 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டப்படுகிறது.
அன்றைய தினம் காலை 7 முதல் மாலை 5 மணி வரை 582 சொட்டு மருந்து மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்குதல், விடுபட்ட குழந்தைகளுக்கு மறுநாள் வீடுவீடாக சென்று ஒரு குழந்தை கூட விடுபடாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கவேண்டும் என்றாா்.
இதில், சுகாதார துறை நாகை மாவட்ட துணை இயக்குநா் வே. சண்முகசுந்தரம், இணை இயக்குநா் மகேந்திரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட மாவட்ட அலுவலா் ராஜம், கொள்ளிடம் வட்டார அலுவலா் சாந்தி, நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ரவிக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


