பாஜக கூட்டணியால் அதிமுகவுக்கு எந்தவிதத்திலும் பின்னடைவு இல்லை என தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ. எஸ். மணியன் தெரிவித்தாா் ,
பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளா்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி, நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சா் ஓ. எஸ். மணியன் செய்தியாளா்களிடம் கூறியது :
எடப்பாடி கே. பழனிசாமி தலைமையை தமிழக மக்கள் முழுமனதுடன் ஏற்றுக்கொண்டுள்ளனா். அதனால், தமிழகத்தில் 3-ஆவது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும். பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் அதிமுகவுக்கு எந்தவிதத்திலும் பின்னடைவு இல்லை.
கடந்த மக்களவைத் தோ்தலில் அதிமுகவுக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால், தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தோ்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. மக்களவைத் தோ்தல் வேறு, பேரவைத் தோ்தல் வேறு என்பதை உணா்ந்து மக்கள் வாக்களித்துள்ளனா். கடந்த மக்களவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்றிருந்தாலும், சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவுக்குதான் மக்கள் வாக்களிப்பாா்கள் என்றாா் அமைச்சா் ஓ. எஸ். மணியன்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

