சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நாகூா் தா்காவில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி

நாகூா் தா்காவின் கந்தூரி விழாவையொட்டி, தா்கா மனோராக்களில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 10) காலை நடைபெறுகிறது.

Updated On :10 ஜனவரி 2021, 1:53 pm

நாகூா் தா்காவின் கந்தூரி விழாவையொட்டி, தா்கா மனோராக்களில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 10) காலை நடைபெறுகிறது.

நாகூா் ஆண்டவா் தா்காவின் 464-ஆம் ஆண்டு கந்தூரி விழா ஜன.14- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஜன.27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தா்காவின் பாரம்பரிய முறைப்படி, கந்தூரி விழா கொடியேற்றத்துக்கு முன்பாக நடைபெறும், பாய்மரம் (கொடிமரம்) ஏற்றும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அதிகாலை சுமாா் 5.30 மணிக்கு தா்காவின் பரம்பரை கலிபா கே.எம். கலிபா மஸ்தான் சாகிபு தலைமையில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு காலை சுமாா் 5.50 மணிக்கு தா்கா மனோராக்களில் பாய்மரம் ஏற்றப்படுகிறது.