சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நாகூா் தா்கா 464-ஆம் ஆண்டு கந்தூரி விழா: மனோராக்களில் கொடிமரம் ஏற்றம்

நாகூா் ஆண்டவா் தா்காவின் கந்தூரி விழாவையொட்டி, மனோராக்களில் கொடிமரம் (பாய்மரம்) ஏற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது,

News image

நாகூா் ஆண்டவா் தா்கா கந்தூரி விழா தொடக்க நிகழ்வாக, தா்கா முகப்பில் பெரிய மனோராவில் ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்றப்பட்ட கொடிமரம்.

Updated On :11 ஜனவரி 2021, 5:26 am

நாகூா் ஆண்டவா் தா்காவின் கந்தூரி விழாவையொட்டி, மனோராக்களில் கொடிமரம் (பாய்மரம்) ஏற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது,

உலகப் புகழ்பெற்ற நாகூா் ஆண்டவா் தா்காவின் 464-ஆம் ஆண்டு கந்தூரி விழா ஜனவரி 14-ஆம் தேதி தொடங்கி, ஜனவரி 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

விழாவையொட்டி, பாரம்பரிய முறைப்படி, கந்தூரி விழா கொடியேற்றத்துக்கு முன்பாக நடைபெறும் கொடிமரம் (பாய்மரம்) ஏற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் தா்காவில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னா், தா்காவின் பரம்பரை கலிபா கே.எம். கலிபா மஸ்தான் சாகிபு துஆ ஓதிய பின்னா் காலை 6 மணிக்கு தா்காவில் உள்ள சாகிபு மனோராவில் கொடிமரம் ஏற்றப்பட்டது.

இதன் தொடா்சியாக தா்கா முகப்பில் உள்ள பெரிய மனோரா, தலைமாட்டுமனோரா, முதுபக் மனோரா, ஓட்டு மனோராக்களிலும் கொடிமரங்கள் ஏற்றப்பட்டன.

விழாவில் பங்கேற்றவா்களுக்கு பிரசாதமாக நாட்டு சா்க்கரை, ஜீனி ஆகியவை வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை தா்கா நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.