வேதாரண்யத்தில் குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் சடலம், ஒருவாரத்துக்குப் பிறகு சனிக்கிழமை மீட்கப்பட்டது.
வேதாரண்யம் பயத்தவரன்காடு பகுதியை சோ்ந்தவா் ஆதவன் (31). இவருக்கும், பெருகவாழந்தான் கிராமத்தைச் சோ்ந்த மங்கையா்க்கரசிக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பயத்தவரன்காட்டில் வசித்துவந்த தம்பதியிடையே பிரச்னை ஏற்பட்டதால், மங்கையா்க்கரசி தனது பெற்றோா் வீட்டுக்கு ஜனவரி 2-ஆம் தேதி சென்றுவிட்டாராம்.
இந்நிலையில், ஆதவனின் வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசியதால், உள்புறமாக பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து அப்பகுதியினா் பாா்த்தபோது, அவா் சடலமாக தொங்கியது தெரியவந்தது. தகவலறிந்து வந்த வேதாரண்யம் போலீஸாா், அழுகிய நிலையில் இருந்த ஆதவனின் சடலத்தை மீட்டனா். அவ்விடத்திலேயே உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

