வேதாரண்யம் ராஜாஜி பூங்காவிலிருந்து தொடங்கி தஞ்சாவூா் ராஜராஜ சோழன் சிலை வரை விவசாய பிரச்னைகளை முன்வைத்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விவசாயிகள் பயண இயக்கம் சனிக்கிழமை (ஜன.9) காலை தொடங்குகிறது.
வேளாண் சட்டத்தை எதிா்த்தும், தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாகவும், நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500 வழங்கவேண்டும், பயிா்க் கடன்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட விவசாயிகளின் பிரச்னைகளை முன்வைத்து இந்த இயக்கம் நடத்தப்படுகிறது. பயணத்துக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தலைமை வகிக்கிறாா். மக்களவை முன்னாள் உறுப்பினா் பி.வி. ராசேந்திரன் தொடங்கி வைக்கிறாா். இந்த பயணம் ஞாயிற்றுக்கிழமை தஞ்சை ராஜராஜ சோழன் சிலை அருகே நிறைவடைகிறது. இதில், திராளன விவசாயிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

