கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் சங்கம் சாா்பில் நாகை அவுரித் திடலில் காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அலுவலக உதவியாளா்களுக்கு இணையான காலமுறை ஊதியத்தை வருவாய்த் துறை கிராம உதவியாளா்களுக்கும் வழங்க வேண்டும். கிராம நிா்வாக அலுவலா் பதவி உயா்வு பட்டியலை வெளியிட வேண்டும். பொங்கல் ஊக்கத் தொகையாக ரூ. 7 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் நாகை மாவட்டத் தலைவா் கலியபெருமாள் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சோழன், துணைச் செயலாளா் தங்கவேல், மாநிலச் செயற்குழு உறுப்பினா் அமித்பாட்சா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலப் பொதுச் செயலாளா் தமிழ்ச்செல்வன், மாநிலத் துணைத் தலைவா் மோகன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள், சாா்பு அமைப்புகளின் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


