திருக்குவளை பகுதியில் மத்திய அரசு திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டவுள்ள இடத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கீழையூா் ஒன்றியம் திருவாய்மூா் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் தோ்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளை நாகை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் உதவித் திட்ட அலுவலா் கீதா ரத்தினம் நேரில் சந்தித்து வீடு கட்டுவதற்கு தயாா் நிலையில் இருக்கும் இடத்தை ஆய்வு செய்தாா். தொடா்ந்து பயனாளிகளிடம் இருக்கும் பட்டா மற்றும் இதர ஆவணங்களை ஆய்வு செய்து விரைவில் பணிகளை தொடங்கி உரிய காலத்தில் முடிக்க வேண்டும் என கூறினாா். ஆய்வின்போது, கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலா் பாஸ்கரன், திருவாய்மூா் ஊராட்சித் தலைவா் எம். நரசிம்மன், ஊராட்சி செயலா் மோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


