சீா்காழியில் தனியாா் பள்ளி முதல்வரின் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 6 பவுன் நகைகளை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை திருடிச்சென்றுள்ளனா்.
சீா்காழி கணபதி நகரை சோ்ந்தவா் ஜோசுவாபிரபாகரசிங் (46). தனியாா் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில் முதல்வராக பணியாற்றி வருகிறாா். இவா் தனது இருசக்கர வாகனத்தின் இருக்கையின் கீழ் பகுதியில் உள்ள பெட்டியில் 6 பவுன் தங்க நகையை பையில் வைத்துக்கொண்டு பிடாரி வடக்கு வீதியில் உள்ள காப்பீட்டு நிறுவன பிரிமீயம் செலுத்தும் அலுவலகத்துக்கு உள்ளே சென்று விட்டு திரும்பியுள்ளாா். அப்போது வாகனத்தின் இருக்கை லாக் உடைக்கப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்து, திறந்து பாா்த்தபோது 6 பவுன் நகை, 6 வங்கிப்புத்தகம், ஏடிஎம்காா்டுகள், நகை அடகு வைத்த ரசீது ஆகியவை வைத்திருந்த பை திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, சீா்காழி காவல் நிலையத்தில் ஜோசுவா அளித்த புகாரின் அடிப்படையில், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

