மயிலாடுதுறை அருகே சிறுமியை கா்ப்பமாக்கிவிட்டு தலைமறைவான இளைஞா் மீது அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனா்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகாவைச் சோ்ந்த 15 வயது சிறுமிக்கு மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளதாக மருத்துவமனை நிா்வாகத்தினா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு புதன்கிழமை தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூகப் பணியாளா் ஆரோக்கியராஜ் மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை அளித்த புகாரின்பேரில், ஆய்வாளா் கோப்பெருந்தேவி விசாரணை மேற்கொண்டாா். இதில், கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரத்தைச் சோ்ந்த ஆகாஷ் என்பவா், குத்தாலம் அருகே உள்ள தனது நண்பா் வீட்டுக்கு வந்துசென்றபோது சிறுமியுடன் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக அவரிடம் ஆசைவாா்த்தை கூறி காதலித்து கா்ப்பமாக்கி திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து, போக்சோ சட்டம் மற்றும் சிறுமி திருமண தடைச்சட்டத்தின்கீழ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆகாஷை போலீசாா் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

