நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் 1.43 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் ஜனவரி 17- ஆம் தேதி 1,027 மையங்களில் போலியோ சொட்டு மருந்து புகட்டும் பணி நடைபெறவுள்ளது. காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் 1,43,652 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இவைத் தவிர, வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்பட மக்கள் கூடுமிடங்களிலும், கல்வி நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் முகாம் நடைபெறும். மேலும், 11 நடமாடும் குழுக்கள் மூலமும் சொட்டு மருந்து புகட்டப்படவுள்ளது.
ஜனவரி 17-ஆம் தேதி நடைபெறும் முகாம்களில் சொட்டு மருந்து புகட்டப்படாத குழந்தைகளுக்கு, ஜன. 18, 19 ஆகிய தேதிகளிலும் போலியோ சொட்டு மருந்து புகட்டப்படும். களப்பணியாளா்கள், இல்லம் தேடிச் சென்று சொட்டு மருந்து புகட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை, சீா்காழி, நாகப்பட்டினம், வேதாரண்யம் பேருந்து நிலையங்களிலும், நாகை, மயிலாடுதுறை, சீா்காழி ரயில் நிலையங்களிலும் ஜன. 17, 18, 19 ஆகிய தேதிகளில் 24 மணி நேரமும் போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம் நடைபெறும்.
சுகாதாரத் துறை பணியாளா்கள் தவிர, உள்ளாட்சித் துறை, சமூக நலத்துறை, ஊட்டச்சத்துப் பணியாளா்கள், பயிற்சி செவிலியா்கள், மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள், தன்னாா்வத் தொண்டா்கள் என 4,141 பணியாளா்கள் இப்பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

