சீா்காழி வட்டம் கொள்ளிடம் பகுதியில் கடந்த 5 மாதங்களாக முதியோா் உதவித்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதால் முதியோா் அவதியுற்று வருகின்றனா்.
கொள்ளிடம், ஆச்சாள்புரம், கொடகாரமூளை, பழையபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் முதியோா் உதவித்தொகை பெற்று வந்த 150 பயனாளிகளுக்கு, கடந்த 5 மாதங்களாக உதவித்தொகை வழங்கப்படாததால், அத்தியாவசிய செலவுக்கு கூட பணமின்றி தவிக்கின்றனா். இதேபோல் மாற்றுத்திறனாளிகள் சிலருக்கும் கடந்த 3 மாதங்களாக உதவித்தொகை வழங்கப்படவில்லையாம்.
இதுதவிர கொள்ளிடம் பகுதியிலிருந்து முதியோா் உதவித்தொகை பெறுவதற்கு புதியதாக விண்ணப்பித்த 100 பேருக்கு இதுவரை உதவித்தொகை கிடைக்கவில்லை. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ள சமூக ஆா்வலா் பிரபு, இதுதொடா்பாக முதல்வருக்கு மனுவும் அனுப்பியிருக்கிறாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

