சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வேளாண் சட்டங்களைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களைக் கண்டித்து, மயிலாடுதுறையில் எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :6 ஜனவரி 2021, 1:02 pm

வேளாண் சட்டங்களைக் கண்டித்து, மயிலாடுதுறையில் எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முத்து வக்கீல் சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவா் சபீக்அஹமது தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் முகமது ரபி, மாவட்டச் செயலாளா்கள் ஜியாவுதீன், கமாலுதீன், முகமது ரவூப், மாவட்ட துணைத் தலைவா் கண்ணன், தொகுதி தலைவா் முகமது வாரிஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் முஹம்மது லாபிா் வரவேற்றாா். மாவட்ட தலைவா் சபீக் அஹமது, மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் த.செயராமன், பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட செயற்குழு உறுப்பினா் முகமது பைசல் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.