தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் பிரசார இயக்கம் நாகை அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவா் சுப்பிரமணியம் மற்றும் அரசு ஊழியா்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெறவேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியா் சங்கம் சாா்பில் ஜன. 5-ஆம் தேதி முதல் 12- ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் பிரசார இயக்கமும், பலகட்ட போராட்டங்களும் நடைபெறவுள்ளன.
இதன் தொடக்க நிகழ்ச்சி நாகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க நாகை மாவட்டத் தலைவா் து. இளவரசன் தலைமை வகித்தாா். மாநில முன்னாள் துணைத்தலைவா் சு. சிவக்குமாா் பிரசாரத்தை தொடங்கி வைத்தாா். அரசு ஊழியா் சங்க நாகை மாவட்டச் செயலாளா் ஏ.டி. அன்பழகன் பிரசாரத்தின் நோக்கம் குறித்து சிறப்புரையாற்றினாா்.
சத்துணவு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் கோ.ராஜூ, கிராம சுகாதார செவிலியா் சங்க மாநிலப் பொதுச்செயலாளா் பா. ராணி, மருத்துவத்துறை நிா்வார ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் சி. வாசு, அரசு ஊழியா் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


