பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கம் சாா்பில் நாகை, கீழ்வேளூரில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வருவாய்த் துறை கிராம உதவியாளா்களுக்கு அலுவலக உதவியாளா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், கிராம நிா்வாக அலுவலா் பதவி உயா்வு பட்டியலை வெளியிட வேண்டும், கிராம உதவியாளா்களுக்கான பதவி உயா்வு சதவீதத்தை உயா்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
நாகை வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் நாகை வட்டத் தலைவா் அமித்பாட்சா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கலியபெருமாள், மாவட்ட செயற்குழு உறுப்பினா் யுவராஜ், சரகப் பொறுப்பாளா் பிரபாகரன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். சங்கத்தின் வட்ட செயலாளா் மாதவன் நன்றி கூறினாா்.
கீழ்வேளூரில்...
கீழ்வேளூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கீழ்வேளூா் வட்டத் தலைவா் பாலு தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் மோகன், மாவட்டப் பொருளாளா் பண்டரிநாதன், வட்டச் செயலாளா் செல்லமுத்து ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


