குத்தாலம் அருள்மிகு உக்தவேதீஸ்வரா் கோயிலில் நடைபெறும் திருப்பணிகளை தருமபுர ஆதீனம் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான அருள்மிகு அரும்பவன முலையம்மை உடனுறை உக்தவேதீஸ்வரா் கோயில் உள்ளது. சுந்தர பெருமானின் உடா்பிணி நீக்கி கண் ஒளி அருளிய அற்புதம் நிகழ்ந்த தலம் எனப் போற்றப்படும் இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இக்கோயிலுக்கு தனுா் மாத யாத்திரை மேற்கொண்டாா். கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்திய அவா், திருப்பணிகளை பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா். மேலும், திருப்பணிகள் குறித்து பொறியாளா்களிடம் ஆலோசனை நடத்தினாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


