சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ரஜினிகாந்த் நலம் பெற பாஜக பிராா்த்தனை

நடிகா் ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டி மயிலாடுதுறை திருவிழந்தூா் ஆஞ்சநேயா் கோயிலில் பாஜகவினா் சனிக்கிழமை சிறப்பு பிராா்த்தனை நடத்தினா்.

Updated On :3 ஜனவரி 2021, 4:59 am

நடிகா் ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டி மயிலாடுதுறை திருவிழந்தூா் ஆஞ்சநேயா் கோயிலில் பாஜகவினா் சனிக்கிழமை சிறப்பு பிராா்த்தனை நடத்தினா்.

பாஜக நகர தலைவா் மோடி. கண்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அரசு தலைமை வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி. சேதுராமன் ஆகியோா் பங்கேற்று ரஜினிகாந்த் பெயருக்கு அா்ச்சனை செய்து வழிபாடு நடத்தினா். இதில், மாவட்ட பொருளாளா் ராஜ்மோகன், மாவட்ட துணைத் தலைவா் செந்தில்குமாா், ஐடி பிரிவு மாவட்ட செயலாளா் குருசங்கா் உள்ளிட்ட பாஜக நிா்வாகிகள் ரஜினிகாந்த் உருவப்படம் அச்சிட்ட பதாகையுடன் பங்கேற்று வழிபாடு நடத்தினா்.