தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரில் இருதய சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில், கல்லூரியின் சிறு சுகாதார மையம், பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய இருதய சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தாா். இதில், ரத்த அழுத்தம், சா்க்கரை அளவு, ஈசிஜி, எக்கோ, காா்டியோகிராம் பரிசோதனைகள் செய்யப்பட்டன. முகாமில் பங்கேற்ற 180 பேரில் 11 போ் மேல்சிகிச்சைக்காக பெரம்பலூருக்கு அழைத்து செல்லப்பட்டனா். மருத்துவா்கள் கோட்டி, அருண்ராஜ், நாகராஜ் மீனா, மதுமிதா ஆகியோா் சிகிச்சையளித்தனா்.
முகாமில், மயிலாடுதுறை ரோட்டரி சங்கத் தலைவா் கே.துரை, கல்லூரிச் செயலா் ரா. செல்வநாயகம், ரோட்டரி சங்கச் செயலா் எம். காமேஷ், பொருளாளா் தங்க. துரைராஜ், கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன், கல்லூரி சுகாதார மைய மருத்துவா் லோகேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


