குடும்ப அட்டைதாரா்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழங்குவதற்கான கரும்புகள், கூட்டுறவுத் துறை மூலம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு, நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
பொங்கல் பண்டிகையையொட்டி, அனைத்துக் குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ. 2,500 ரொக்கம் மற்றும் முழு கரும்பு, முந்திரி திராட்சை உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தப் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி ஜன.4-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதையொட்டி, நாகை மாவட்டத்தில் உள்ள 4,78,549 குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்க, கூட்டுறவுத் துறை மூலம் பொங்கல் கரும்புகள் கொள்முதல் செய்யப்பட்டு, வட்டம் வாரியாக நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பும் பணி தொடங்கியது.
மயிலாடுதுறை மாவட்டத்துக்குள்பட்ட அல்லிவிளாகம், செம்பதனிருப்பு, காத்திருப்பு, திருவாவலங்காடு, வானாதிராஜபுரம், மன்னன்பந்தல், திருமணஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொங்கல் கரும்புகள், கூட்டுறவுத் துறை மூலம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு, டிச.30-ஆம் தேதி முதல் வெட்டப்பட்டு வருகிறது.
இதன் தொடா்ச்சியாக, வெட்டப்பட்ட கரும்புகளை வட்டம் வாரியாக பிரித்து அனுப்பும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. நாகை, கீழ்வேளூா் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கான பொங்கல் கரும்புகள், நாகை அவுரித் திடலுக்கு லாரிகள் மூலம் வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டிருந்தன. இந்தக் கரும்புகள், நாகை பொதுப் பணியாளா் கூட்டுறவு பண்டக சாலை மூலம் நாகை, கீழ்வேளூா், திருமருகல் மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு லாரிகள் மூலம் கொண்டுச் செல்லப்பட்டன.
இதுகுறித்து, நாகை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் நடராஜன் கூறியது: நாகை மாவட்டத்தில் உள்ள 585 முழு நேர நியாயவிலைக் கடைகள் மற்றும் 151 பகுதி நேர நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழங்கவுள்ள கரும்புகளை வெட்டி, இயக்கம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
நாகை, கீழ்வேளூா், திருக்குவளை வட்டங்கள், மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளுக்கான விநியோகம் சனிக்கிழமை (ஜன. 2) இரவுக்குள் அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் கரும்புகள் அனுப்பப்பட்டு விடும். நாகை மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல்படி, முன் எப்போதும் இல்லாத வகையில் நிகழாண்டில், கூட்டுறவுத் துறை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்புகளைக் கொள்முதல் செய்துள்ளது. உரிய விலை கொடுத்து கரும்புகள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பது, கரும்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


