சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மின் கட்டண உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி மாநிலத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை

Updated On :22 ஆகஸ்ட் 2013, 6:25 pm

புதுச்சேரி மாநிலத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் திருப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நிரவி திருப்பட்டினம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில், திருப்பட்டினம் மார்க்கெட் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார தலைவர்  ஆர்.கே. செல்வமணி தலைமை வகித்தார்.

புதுச்சேரி மாநிலத்தில் கடுமையாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வாட் வரி உயர்வால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பஸ் கட்டண  உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த முதல்வர் என். ரங்கசாமி, 4500 அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளார். இலவச ஒற்றை அவியல் அரிசி வழங்கக் கோரும் மக்களுக்கு கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

திருப்பட்டினத்தில் காந்தி பூங்கா பராமரிக்கப்படவில்லை. பல்வேறு அரசுத் துறை சார்ந்த நிறுவன ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம்  தரப்படவில்லை.

உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் புதுச்சேரி அரசு காலம் தாழ்த்துகிறது. விவசாயிகளுக்கு  கடந்த ஆண்டு தரக்கூடிய வறட்சி நிவாரணம் இதுவரை தரப்படவில்லை. இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் பகுதி மீனவர்களை விடுவிக்க  மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை. பல்வேறு அரசு நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டது, செயல்பாட்டுக்கு  வரவில்லை. போலகம் பகுதியில் வணிக வளாகம்  கட்டியும் திறக்கப்படவில்லை என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

மாநில துணைத் தலைவரும், முன்னாள்  அமைச்சருமான ஆர். கமலக்கண்ணன், முன்னாள் பேரவை உறுப்பினர் அ. மாரிமுத்து, மாவட்டத் தலைவர் பாஸ்கரன் உள்ளிட்டோர் அரசின்  செயல்பாட்டை விமர்சித்துப் பேசினர். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்  கலந்துகொண்டனர். தொடர்ந்து மின்துறை அலுவலகத்தில் இளநிலைப் பொறியாளரை சந்தித்து மின்கட்டண உயர்வை வாபஸ் பெறுவது தொடர்பாக பேரணியாகச் சென்று மனு கொடுத்தனர்.