நாகையில் புதை சாக்கடை குழாய் பதிக்கும் பணியையொட்டி, நாகை - நாகூர் வழியேயான சாலைப் போக்குவரத்து ஆக. 23-ம் தேதி முதல் மாற்றம் செய்யப்படுகிறது என நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை தேசிய நெடுஞ்சாலையில் ஐ.டி.ஐ பிள்ளையார் கோயிலிலிருந்து, வெளிப்பாளையம் தம்பித்துரை பூங்கா வரையிலான சாலையில் புதை சாக்கடை குழாய் பதிக்கும் பணி ஆக. 23-ம் தேதி தொடங்கப்பட்டு, அக். 22-ம் தேதி வரை நடைபெறும்.
இதையொட்டி, ஆக. 23-ம் தேதி முதலான 2 மாத காலத்துக்கு நாகை - நாகூர் தேசிய நெடுஞ்சாலை ஒருவழிப் பாதையாக அறிவிக்கப்படுகிறது. நாகூர் வழியாக நாகை வரும் அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் வாஞ்சூரிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியே நாகைக்கு இயக்கப்பட வேண்டும்.
பொதுமக்களின் வசதிக்காக, அரசுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் நாகை புதிய பேருந்து நிலையத்திலிருந்து நாகூர் வரை சிறப்பு நகரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

